அரசு உத்தரவை மீறி தேர்வு நடத்தத் தயாராகும் தனியார் பள்ளிகள்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

 

அரசு உத்தரவை மீறி தேர்வு நடத்தத் தயாராகும் தனியார் பள்ளிகள்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

கொரோனா அச்சம் காரணமாக 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க அரசு ஆணையிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு தேர்வு நடத்தி தான் தேர்ச்சி அளிக்கப்படும் என சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அரசு உத்தரவை மீறி 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இறுதியாண்டு தேர்வு நடத்த தயாராகி வருவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ff

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று (மே 18) வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா அச்சம் காரணமாக 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க அரசு ஆணையிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு தேர்வு நடத்தி தான் தேர்ச்சி அளிக்கப்படும் என சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது!

 

அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அரசே ஆணையிட்ட பிறகும் தனியார் பள்ளிகள் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது மாணவர்களிடையே தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இது தேவையற்றது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  தேர்வு நடத்துவதை தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.