அரசு உதவி பெரும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் !

 

அரசு உதவி பெரும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் !

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த 2018 ஆம் ஆண்டு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் அதிக பட்சமாக ரூ.90 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை நிர்ணயம் செய்தது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை விட 2.57 மடங்கு அதிகம் ஆகும்.

ttn

இது குறித்து புதுச்சேரியில் உள்ள கொம்பாக்கம் என்னும் பகுதியில் கட்டப்பட்ட பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மட்டும்  4.5 லட்சம் பேர் சுற்றுலாவிற்காக வந்ததாகவும், இதனால் புதுச்சேரி பொருளாதாரம் முன்னேறும் என்றும் தெரிவித்தார். மேலும், இப்போது நம் நாட்டில் மதம் என்னும் பெயரால் மக்கள் பிரித்துப் பார்க்கப் படுகிறார்கள். அதனைத் தகர்த்து எறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.