அரசு அலுவலகங்களில் தொடரும் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரம்…!

 

அரசு அலுவலகங்களில் தொடரும் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் தீவிரம்…!

மக்களிடமும் அரசு அலுவலர்களிடமும் லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று எடுத்துத்துரைத்தாலும், லஞ்சம் என்ற ஒன்றைத் தவிர்க்க முடியவில்லை. 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது மற்றும் கொடுப்பது வழக்கமாக மாறிவிட்டது. ஒரு வேலையை உடனே முடிக்க வேண்டும் என்றால் அது அரசு அலுவலகங்களில் நடக்காத காரியம். அதனால் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலையை உடனே சிலர் முடித்துக் கொள்வர். மக்களிடமும் அரசு அலுவலர்களிடமும் லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று எடுத்துத்துரைத்தாலும், லஞ்சம் என்ற ஒன்றைத் தவிர்க்க முடியவில்லை. 

Corruption

இதனால், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அரசு அலுவலகங்களில் கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் உள்ள துடியலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அங்குக் கணக்கில் வராத 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது.

Raid in Government office

அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலகர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அங்கும் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது. இரு அலுவலகங்களிலும் சேர்த்து ரூபாய் 4 லட்சத்து 80 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.