அரசு அதிகாரிகள் 9 மணிக்கு மேல் வந்தால் சம்பள பிடித்தம் | அதிர வைக்கும் உத்தரவு

அரசு அதிகாரிகள் 9 மணிக்கு மேல் வந்தால் சம்பள பிடித்தம் | அதிர வைக்கும் உத்தரவு

இனி அரசு அதிகாரிகள், தங்களது பணிக்கு  காலை 11 மணிக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, காபி குடிக்க போய்விட்டு அரட்டையடித்து மீண்டும் 1 மணிக்கு மதிய சாப்பாட்டிற்காக 12 மணியில் இருந்தே தயாராகி பொதுமக்களை அலைகழித்து சோம்பேறித்தனமாய் வேலைப்பார்க்காமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க முடியாது.  அரசு அதிகாரிகள் மிகச் சரியாக காலை 9 மணிக்குள் அலுவலகம் வந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இருங்க… இருங்க… உங்க சந்தோஷம்  புரியுது.. இதெல்லாம் நம்ம தமிழ்நாட்ல கிடையாது. ஆனாலும் நம்ம இந்தியாவில் தான் இந்த மாற்றம் வருதுன்னு சந்தோஷப்பட்டுக்கலாம். 

goverment office

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில் அவரது அலுவலகம் வெளியிட்ட டுவிட்டரில் குறிப்பில், அரசு உயர் அதிகாரிகள் காலை 9 மணிக்குள் அலுவலகம் வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உத்திர பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு மேல் தாமதமாக வந்தால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

yogi

இந்த உத்தரவு அலுவலர்களுக்கு மட்டுமல்லாமல், அலுவலகம் வரும் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரிகள், காலை 9 மணி முதல் நண்பகல் 11 மணி வரை மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும், பணிக்கு நேரத்துக்கு வர அதிகாரிகள் தவறினால் சம்பளம் பிடித்தம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதோடு நிறுத்தாமல், ஏடிஜி பியூஷ் ஆனந்த் உ.பி போலீசுக்கு அனுப்பிய கடிதத்திலும், ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் வேலை செய்யாமல் நேரத்தை கழித்து செல்லும் அதிகாரிகளின் விவரங்களையும் ஜூன் 30க்குள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றங்களை வெகுவாக உ.பி. மக்கள் வரவேற்று உள்ளனர். 

நம்ம தமிழகத்திலும் ஆட்சியில் இருக்கும் (உ.பி)உடன் பிறவா சகோதரர்கள் இப்படியெல்லாம் முயற்சி எடுத்தா நாமும் பாராட்டலாம் தானே?