அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்.

 

அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்.

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி தொடங்கப் பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை செயல் படுத்தப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்திய அரசு வைக்கும் தேர்வுகளில் தேர்ச்சி பெற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று பல கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

Govt. Schools

அதனால், அத்திக்கடவு-  அவினாசி திட்டத்துக்கான 5 ஆவது நீரேற்ற நிலையத்தின் பூமி பூஜையில் நேற்று கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி தொடங்கப் பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை செயல் படுத்தப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

Minister Sengottaiyan

அவர் பின்லாந்துக்கு சென்ற பொது அங்குள்ள கல்வித் திட்டத்தை அறிந்ததாகவும், அதனை தமிழ் நாட்டில் செயல் படுத்தினால், பிளஸ் 2 முடிந்தவுடன் உயர் கல்விக்கு செல்லாத 40 சதவீதம் மாணவர்களுக்கு உடனே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி,  இந்த ஆண்டு பல லட்சம் கணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டது. அதே போல் 8,9, மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.