அரசுப்பணத்தில் ஜெருசலேம் போலாமா? ஜெகனுக்கு பாஜக கண்டனம்

 

அரசுப்பணத்தில் ஜெருசலேம் போலாமா? ஜெகனுக்கு பாஜக கண்டனம்

முதலில் இது தனிப்பட்ட பயணம் என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் அனுப்ப முடியாதல்லவா, எனவே எல்லார் செலவையும் பொதுப்பணித்துறை கணக்கிலேயே எழுதி, 22 லட்சத்துக்கு மொய் எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, குடும்பத்தினருடன் ஜெருசலேமுக்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜெருசலேம் புனிதப்பயணம் செல்லும்போதும் சொந்தக்காசை செலவழித்துச் செல்லும் ஜெகன், இந்த வருடம் மட்டும் அரசுப்பணமான 22 லட்சத்தை தனிப்பட்ட பயணத்திற்கு எப்படி செலவழிக்கலாம் என பாஜக முக்கியஸ்தர்களில் ஒருவரான லங்கா தினகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Jagan with family in Jerusalem

ஜெகனுடன் அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உடன்செல்ல, மற்றொரு அதிகாரி நான்கு நாட்களுக்கு முன்பே ஜெருசலேம் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டார். முதலில் இது தனிப்பட்ட பயணம் என அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் அனுப்ப முடியாதல்லவா, எனவே எல்லார் செலவையும் பொதுப்பணித்துறை கணக்கிலேயே எழுதி, 22 லட்சத்துக்கு மொய் எழுதியிருக்கிறார்கள். முதல்வராக இருப்பதால், மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டியது அவசியம், அதனை பெற்றுவிட்டார். அது முக்கியமல்ல. வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறவேண்டிய துர்பாக்கிய நிலை ஜெகனுக்கு. ஆந்திராவுக்கு கெத்தாக சி.எம்மாக இருந்தாலும் ஜாமீனில்தான் இருக்கிறார் ஜெகன். நீதிமன்ற அனுமதி அவசியம்தானே அப்போ?