அரசியல் விமர்சனங்களை கடந்து ஒரே மேடையில் தோன்றிய மு.க.ஸ்டாலின், கமல் ஹாசன்: எங்கு தெரியுமா?

 

அரசியல் விமர்சனங்களை கடந்து ஒரே மேடையில் தோன்றிய மு.க.ஸ்டாலின், கமல் ஹாசன்: எங்கு தெரியுமா?

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மகளின் திருமண விழாவில் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் ஹாசனும் கலந்து கொண்டார்.

சென்னை: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மகளின் திருமண விழாவில் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் ஹாசனும் கலந்து கொண்டார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசன்  திமுகவை ஊழல் நிறைந்த அழுக்கு பொதி என்று விமர்சித்திருந்தார். இதற்கு திமுக சார்பில் அறிக்கை வெளியிட்ட வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், திமுகவை கமல் ஹாசன்  விமர்சித்திருப்பது, அரைவேக்காட்டுதனம் என்று கடுமையாக சாடினார்.

kamal

இந்நிலையில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மகளின் திருமணம் திருவான்மியூரில்  நடைபெற்றது. அந்த திருமணம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில்  மக்கள் நீதி மய்யத்தின்  தலைவர்  கமல் ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அரசியல் விருப்பு வெறுப்பைகளை தாண்டி முக ஸ்டாலினும், கமல் ஹாசனும் மேடையில் ஒன்றாக அமர்ந்து உரையாடினர். 

இவ்விழாவில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், எம்.பிக்கள் கனிமொழி, ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.