அரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்….. பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி…

 

அரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்….. பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி…

மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால் கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

[21:40, 2/17/2020] Gps: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கடும் போட்டியை அளித்து வருகிறது. 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 இடங்களை மட்டுமே வென்ற பா.ஜ.க., 2019ல் 18 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜிக்கு கடும் சவால் கொடுத்தது. இந்நிலையில் 2021ல் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தா பானர்ஜி

இந்த தேர்தல் கட்டாயம் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தால் மட்டுமே மம்தா பானர்ஜியால் பா.ஜ.க.வை சமாளிக்க முடியும். இதனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு தங்களது ஆலோசகராக செயல்படும்படி பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி நாடினார். இதனையடுத்து அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரச்சாரத்தை வகுக்க பிரசாந்த் கிஷோரின் இந்திய பொலிடிக்கல் ஆக்சன் கமிட்டியுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இசட் பிரிவு பாதுகாப்பு

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால் கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தல்கள் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரசாந்த் கிஷோருக்கு இரண்டு தனி பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு வீரருடன் கூடிய எஸ்கார்ட் கார் மற்றும் அவர் வசிக்கும் இடத்தில் வீட்டு காவலர்கள் மற்றும் அந்த மாநிலத்தில் அவர் எங்கு சென்றாலும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு பிறகு விவிஐபி பாதுகாப்பு பெறும் மூன்றாவது நபர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.