அரசியல் பதிவு போட்டவரை வீட்டுக்கு சென்று மிரட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்!?

 

அரசியல் பதிவு போட்டவரை வீட்டுக்கு சென்று மிரட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்!?

ஆளும் கட்சிகளுக்கு எதிரான ஸ்டேட்டஸ்களை போடுகிறவர்களின் கணக்கு தானாகவே முடங்கும் படியான செட்-அப் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி,தோல்வியை தீர்மானிப்பதில் சோசியல் மீடியாக்களின் பங்கு கணிசமாக இருக்கும் என்பதை ஆளும் கட்சிகள் உறுதியாக நம்புகின்றன என்பதற்கு நிறையவே உதாரணம் சொல்லலாம். ஆளும் கட்சிகளுக்கு எதிரான ஸ்டேட்டஸ்களை போடுகிறவர்களின் கணக்கு தானாகவே முடங்கும் படியான செட்-அப் பண்ணி வைத்திருக்கிறார்கள். சிலரை வேறு பல காரணங்கள் சொல்லி கைது செய்யும் சம்பவங்களும் இங்கு நடந்திருக்கிறது.

facebook

இந்த நிலையில், பதிவிடும் நபரின் வீட்டுக்கே போய் மிரட்டியதாக ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியதாகவும், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென்று விசாரணை செய்ததாக IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்,”பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீசார் வீட்டுக்கு வருவதை போல என் வீட்டுக்கு  பேஸ்புக் அதிகாரிகள் வந்தார்கள். என்னுடைய ஆதார் அட்டையை சோதனை செய்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது!” என்று பதிவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

facebook

இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் ‘இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என்று மறுத்திருக்கிறார். மேலும் அவர் பேசும்போது’ பேஸ்புக்கில் பதிவிடும் நபரின் வீட்டுக்கே சென்று சோதனை செய்யும் எந்த நடவடிக்கையிலும் ஃபேஸ்புக் ஈடுபடவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தொடர்பான விளம்பரங்கள் பெறுவதிலும், அதை கண்காணிக்கும் நிலையிலும் மட்டுமே ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

விதவிதமா..ரகம்ரகமா பிரசாரம் மேற்கொண்ட மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி!