அரசியல் தலைவர்களின் கனவைக் கலைத்த ரஜினி! – அதிர்ச்சியில் மு.க.அழகிரி

 

அரசியல் தலைவர்களின் கனவைக் கலைத்த ரஜினி! – அதிர்ச்சியில் மு.க.அழகிரி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், தங்களுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்று பல தலைவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கராத்தே தியாகராஜன் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்பது போல பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினியின் அரசியல் முடிவு மு.க.அழகரி உள்ளிட்ட முன்னணி அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், தங்களுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்று பல தலைவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கராத்தே தியாகராஜன் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்பது போல பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நான் முதல்வர் ஆக மாட்டேன் என்று ரஜினி உறுதியாக கூறிவிட்டார். மேலும் கட்சி தொடங்குவாரா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

karate-thiagarajan

50 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 சதவிகித முன்னுரிமை, மாற்றுக் கட்சியில் இருந்து வரும் நல்லவர்களுக்கு 30 சதவிகிதம் வரை பதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு தாவலாம் என்று நினைத்திருந்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கராத்தே தியாகராஜன் போல கருணாநிதியின் மகனும் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிகூட ரஜினியின் கட்சியில் இணைந்து செயல்படலாம் என்று திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் கலைஞர் மறைந்த பிறகு கூட கட்சி தொடங்காமல் அமைதி காத்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் அறிவிப்பு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

mk-alagiri

மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை. அவரது ஜாதகத்திலேயே முதலமைச்சர் ஆக முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே, ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அடுத்து அவர்தான் முதல்வர். மு.க.ஸ்டாலின் பதவிக்காக வாழ்நாள் முழுக்க காத்திருக்க வேண்டியதுதான் என்று தன் நெருங்கிய வட்டாரங்களில் இதுநாள் வரை சொல்லி ஆறுதல் அடைந்து வந்துள்ளார் அழகிரி. ரஜினி கட்சித் தொடங்குவாரா என்பதே கேள்விக் குறியான நிலையில் அழகிரிக்கு அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

rajinikanth

ரஜினி பேட்டி முடித்து வீடு திரும்புவதற்குள்ளாக மு.க.அழகிரி வீட்டிலிருந்து ரஜினிக்கு போன் போயுள்ளது. இந்த சூழ்நிலையில் மு.க.அழகிரியிடம் பேசுவது சரியாக இருக்காது என்று கருதிய ரஜினி, பிறகு பேசுகிறேன் என்று கூறி தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மு.க.அழகிரி யோசிப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மு.க.அழகிரி மட்டுமல்ல… ரஜினியோடு இணைய நினைத்த பலரும் விழிபிதுங்கிப்போய் தான் இருக்கின்றனர்!