‘அரசியல் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருங்கள்’ – ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்வைஸ்!

 

‘அரசியல் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருங்கள்’ – ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அட்வைஸ்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காமல், நிம்மதியாக இருக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஈரோடு: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காமல், நிம்மதியாக இருக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுரை வழங்கியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு அவரது கோடான கோடி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், “நடிகர் ரஜினிகாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் அரசியல் கட்சி தொடங்காமல், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே என் அறிவுரை” என தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற ஓராண்டுக்குள், 5 மாநிலத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்று மோடியை வீழ்த்தக் கூடிய சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், பாஜகவின் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.