அரசியல்வாதிகள், அதிகாரிகள் வந்தால் மட்டும் செயல்படும் இலவச வைஃபை வசதி! – கிராம மக்கள் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள், அதிகாரிகள் வந்தால் மட்டும் செயல்படும் இலவச வைஃபை வசதி! – கிராம மக்கள் குற்றச்சாட்டு

உத்தரகாண்டில் உயர்ந்த மலை கிராமங்களில் மக்களின் வசதிக்காக அரசு இலவச வைஃபை வசதியை உருவாக்கித் தந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா – டிஜிகர்வன் என்ற திட்டத்தின் கீழ் வைஃபை வசதி செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் இந்த வைஃபைகள் செயல்படுவது இல்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வந்தால் மட்டுமே இந்த இலவச வைஃபை செயல்படுகிறது என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டில் உயர்ந்த மலை கிராமங்களில் மக்களின் வசதிக்காக அரசு இலவச வைஃபை வசதியை உருவாக்கித் தந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா – டிஜிகர்வன் என்ற திட்டத்தின் கீழ் வைஃபை வசதி செய்து தரப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் இந்த வைஃபைகள் செயல்படுவது இல்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

digigaon-scheme-09

உத்தரகாண்ட் மாநிலம் கெஸ் என்ற சிறிய மலை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இலவச வைஃபை சேவைக்காக கருவி பொருத்தப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல சேவைகளை ஆன்லைனில் பெற முடிந்ததால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டிய பிரச்னை அவர்களுக்கு தீர்ந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைக்கவில்லை.
மாதத்தின் பெரும்பாலான நாட்கள் வைஃபை வசதி செயல்படுவது இல்லை. அந்த கிராமத்துக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாராவது வந்தால், உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஒன்றிரண்டு நாட்கள் மீண்டும் வைஃபை சேவை கிடைக்கும். அதன் பிறகு மீண்டும் வைஃபை சேவை நிறுத்தப்படுகிறது என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இணைய சேவை பெற வேண்டும் என்றால் குறைந்தது நான்கு கி.மீ தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் வரும்போது மட்டும் வைஃபை வசதியை ஆன் செய்வதால் கிராம மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நிரந்தரமாக வைஃபை வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.