அரசியல்வாதிகளை அலற வைத்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார்

 

அரசியல்வாதிகளை அலற வைத்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார்

தேர்தல் ஆணையத்தின் உண்மையான சக்திகளை அரசியல்வாதிகளுக்கு காட்டிய முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் 86 வயதில் நேற்று காலமானார்.

திருநெல்லை நாராயணன் ஐயர்  சேஷன் என்ற டி.என். சேஷன் 1955ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவர். இந்திய ஆட்சிபணி அலுவலராக நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர். குறிப்பாக அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஆற்றிய பணிதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

டி.என். சேஷன்

1990ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை ஆணையராக டி.என். சேஷன் பொறுப்பேற்றார். அதுவரை இந்திய தேர்தல் ஆணையத்தை மதிக்காமல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வந்த அரசியல்வாதிகளுக்கு டி.என். சேஷன் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் உண்மையான சக்திகளை காட்டி அவர்களை டி.என். சேஷன் அலற வைத்தார்.

டி.என். சேஷன்

நம் நாட்டில் தற்போது தேர்தல் முறையாக நடைபெறுவது டி.என். சேஷன் அன்று மேற்கொண்ட சீர்திருத்தங்கள்தான் விதை என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1990 டிசம்பர் 12 முதல் 1996 டிசம்பர் 11ம் தேதி வரை டி.என். சேஷன் இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் ஆழ்வார்பேட்டை வீட்டில் வசதி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு டி.என். சேஷன் தனது 86 வயதில் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் டிவிட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், டி.என். சேஷன் சிறந்த அரசு ஊழியர். விடாமுயற்சி மற்றும் நேர்மையுடன் அவர் இந்தியாவுக்காக பணியாற்றினார். தேர்தல் சீர்த்திருத்தங்கள் நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவானதாகவும், அதிக பங்களிப்புடனும் ஆக்கியுள்ளன. அவரது மறைவு வேதனை கொடுத்தது. ஓம் சாந்தி. என பதிவு செய்து இருந்தார்.