அரசியல்வாதிகளின் அராஜகம்! பயத்தில் அலறும் தமிழக மக்கள்!

 

அரசியல்வாதிகளின் அராஜகம்! பயத்தில் அலறும் தமிழக மக்கள்!

சென்னையில் முறையான அனுமதியில்லாமல் அதிமுகவினரால் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்தார். அதன் பிறகு இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தமிழகம் முழுவதும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்திருந்தது.

சென்னையில் முறையான அனுமதியில்லாமல் அதிமுகவினரால் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணமடைந்தார். அதன் பிறகு இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தமிழகம் முழுவதும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்திருந்தது. சட்டம் எப்படி இருந்தால் எங்களுக்கு என்ன என்கிற போக்கை கையாள்வதைப் போல, அரசியல் கட்சியினருக்கு எத்தனை உயிர்களை பலி வாங்கினாலும் திருந்துகிற எண்ணமே ஏற்படாது போல என்பதைப் போல்… சாலைகளில் ப்ளெக்ஸ் பேனர்களை வைப்பதற்கு பதிலாக தற்போது தங்களது தலைவர்களை வரவேற்பதற்காகவும், அந்த பகுதிகளில் அவர்களின் செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதற்காகவும் பெரிய பெரிய அளவுகளில் சாலைகளின் நடுவே கொடிக்கம்பங்களை வைத்து வருகிறார்கள்.

anuradha

அப்படி கோவையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மெகா கொடி கம்பம் சாலையில் சரிந்து விழுந்து, அனுராதா  என்ற இளம்பெண் விபத்துக்குள்ளானார். தற்போது மருத்துவமனையில் அவரது இடது காலை அகற்றியுள்ளனர். அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற இருக்கிற நிலையில், ஒவ்வொரு வார்டுகளிலும் டிஜிட்டல் பேனர்களுக்கு பதிலாக  சாலைகளில் தங்களது செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க இன்னும் உயர உயரமான கொடி கம்பங்களை போட்டி போட்டுக் கொண்டு அனைத்து அரசியல் கட்சியினருமே வைக்கப் போகிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காவு வாங்கிய பிறகு இந்த விளம்பர யுக்தியையும், புகழ் போதையையும் அரசியல் கட்சியினர் தணித்துக் கொள்ளப் போகின்றனரோ என்கிற பயத்தில் உறைந்திருக்கிறார்கள் பொதுமக்கள்!