அரசியலை விட்டு வந்தால் சீமானுக்கு கைலாசாவில் குடியுரிமை வழங்க தயார்- நித்தியானந்தா!

அரசியலை விட்டு வந்தால் சீமானுக்கு கைலாசாவில் குடியுரிமை வழங்க தயார்- நித்தியானந்தா!

குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என சீமான் கூறியதற்கு நித்தியானந்தா பதிலடி கொடுத்துள்ளார். 

குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என சீமான் கூறியதற்கு நித்தியானந்தா பதிலடி கொடுத்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்துவருகிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய சீமான், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடியுரிமையற்றவனாக்கி விட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன். அங்கு அதிபர் நித்தியானந்தா இருக்கிறார் என நகைச்சுவையாக பேசினார். 

seeman

இதற்கு உடனடியாக ட்விட்டரில் பதிலளித்துள்ள நித்தியானந்தா, “தமிழ் பிரிவினைவாதிகள் எல்லாம் வந்து தங்குவதற்கு, கைலாசா நாடு ஒன்று திறந்த மடம் அல்ல அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்’ இப்படிக்கு பிரதமர்  அலுவலகம், கைலாசா” என பதிவிட்டுள்ளார்.