அரசியலுக்கு வர இந்த தகுதி எல்லாம் வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி சொல்லும் கணக்கு!

 

அரசியலுக்கு வர இந்த தகுதி எல்லாம் வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி சொல்லும் கணக்கு!

நடிகர் விஜய் சேதுபதி அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியுள்ளார். 

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்க கூடிய நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். 

இந்நிலையில் மதுரையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பங்குபெற்றார்.  பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நடிகர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது பற்றி கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு அவர்  கூறியதாவது , ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் போன தவறில் நடிகர்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் பொறுப்பு உள்ளது. இருந்தும் வாக்கு அளித்த நடிகர்களைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்’ என்றார். 

vijay sethupathi

பின்பு இந்த தேர்தலில் யாரு வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு ‘யாருக்கு அறிவும், மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளதோ அவர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாம்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கே.வி. ஆனந்தின் கேமரா கண்கள்; வியக்க வைக்கும் ‘காப்பான்’ லொக்கேசன்?! – புகைப்படம் உள்ளே