அரசியலுக்கு வந்துடாதீங்க! அது பணத்தால் இயங்குகிறது! ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்!!

 

அரசியலுக்கு வந்துடாதீங்க! அது பணத்தால் இயங்குகிறது! ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்!!

தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சமகால அரசியலில் பணம் முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும், சினிமா கவர்ச்சி அரசியலுக்கு எடுபடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சமகால அரசியலில் பணம் முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும், சினிமா கவர்ச்சி அரசியலுக்கு எடுபடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து அதற்கான சில நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். ஆனால் அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கவில்லை. உலக நாயகனான  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, மக்களவை தேர்தலையும் சந்தித்தார். ஆனால் அதில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக, திமுகவின் வாக்குகளை உடைக்க முடிந்ததே தவிர அவரால் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை. 

Rajini kamal

இந்நிலையில் தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சமகால அரசியலில் பணம் முக்கிய இடம் பெற்றுள்ளதாகவும், சினிமா கவர்ச்சி அரசியலுக்கு எடுபடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் குதித்த முன்னணி நடிகர்கள் தொலைந்து போகிறார்கள் என்பதற்கு தாமே சிறந்த உதாரணம் என்றும் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கான பணத்தை பயன்படுத்தி எனது சொந்த தொகுதியிலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன். என்னைப்போலவே எனது சகோதரர் பவன் கல்யாணும் அரசியலில் குதித்து நிலைத்தடுமாறி நிற்கிறார் என கூறியுள்ளார். 

நீங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கிய சிரஞ்சீவி, 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 294 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் சிரஞ்சீவி, திருபதி மற்றும் அவரது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் திருப்பதியில் வெற்றி பெற்ற சிரஞ்சீவி தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.