‘அரசியலுக்கு எப்போ வருவார்..’ டெல்லியில் குவிந்த ரஜினி தூதர்கள் : ரஜினிகாந்த்தின் அடுத்த மூவ் இதுதானாம்!

 

‘அரசியலுக்கு எப்போ வருவார்..’ டெல்லியில் குவிந்த ரஜினி தூதர்கள் : ரஜினிகாந்த்தின் அடுத்த மூவ் இதுதானாம்!

இந்த கதையைக் கேட்டுக் கேட்டு, ‘எப்போ சார் நீங்க அரசியலுக்கு வருவீங்க’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த கதையைக் கேட்டுக் கேட்டு, ‘எப்போ சார் நீங்க அரசியலுக்கு வருவீங்க’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து பேட்டியளித்த ரஜினிகாந்த், கூடிய சீக்கிரம் நல்ல தகவல் வரும் என்றும் கமலுடன் கூட்டணி அமையப் போகிறதா இல்லையா என்பது தேர்தலின் போது தெரிய வரும் என்று பேசினார். அதனை வைத்து மக்கள் எல்லாரும் அவர் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்று ஊகித்துக் கொண்டனர். ஆனால் எப்போது வருவார் என்று தான் தெரியாமல் இருக்கிறது. 

ttn

அவர் உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டு விட்டதாகவும், அதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினிகாந்த்,  கிராமங்களில் பூத் கமிட்டி அமைக்கும் அளவிற்குத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளாராம். சமீப காலமாக அவரது பேச்சில் சற்று மாறுதலும் இருப்பதால் தமிழ்ப் புத்தாண்டு அன்று நல்ல செய்து சொல்வார் என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் சிலர் கூறியிருக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் கட்சி பெயர், சின்னம் என எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முயற்சியும் நடைபெற்று வருகிறதாம். 

ttn

இந்நிலையில் ரஜினிக்கு வேண்டிய சிலர் டெல்லிக்குச் சென்று வழக்கறிஞரிடம் கட்சி தொடங்கும் நடைமுறைகளைப் பற்றியும், அதற்குத் தேவையான ஆவணங்களைப் பற்றியும் விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும்,  ரஜினிகாந்த் தேர்தல் ஆணையர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதால், அவர் கட்சியைப் பதிவு செய்வது மட்டும் தான் பாக்கி. மே மாதத்திற்குள் அவரது கட்சி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அறிவிப்பு வெளிவந்ததும் அரசியல் களமும் 2021 தேர்தல் களமும் சூடுபிடிக்கும்.