அரசியலுக்கு எங்களை பயன்படுத்த வேண்டாம்: 150 முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்?!..

 

அரசியலுக்கு எங்களை பயன்படுத்த வேண்டாம்: 150 முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்?!..

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ உடை அணிந்து வாக்கு சேகரிக்க சென்றார். காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா, விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

ராணுவ வீரர்களின் வீர தீர செயல்களைச் சொல்லி இது எங்கள் ஆட்சியில் நிகழ்ந்தது என வாக்கு கேட்பது வழக்கமாகிவிட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பால்கோட் தாக்குதல் எங்கள் ஆட்சி அதிகாரத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என வாக்கு சேகரிக்கிறார். மஹாராஸ்டிராவில் பேசிய மோடி, முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள், பால்கோட் தாக்குதல் நடத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

xcbxnc

அதேபோல் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ உடை அணிந்து வாக்கு சேகரிக்க சென்றார். காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா, விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி எல்லாம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 150 முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

zzfbz

அதில், ராணுவத்தின் பெயர்கள், ராணுவத்தின் சீருடைகள், அடையாளங்கள், செயல்கள், ராணுவ வீரர்கள் ஆகியவற்றை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம். அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்கிறோம்.

இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்று அரசியல்வாதிகளின் செயல்கள், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீராங்கனைகளின் பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், மதச்சார்பற்று, அரசியல்சார்பற்று தேசத்துக்காக பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் செயல்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதையும் வாசிக்க: இரட்டை கொலை வழக்கில் பக்கத்துக்கு வீட்டு இளைஞர் கைது: விபரீத ஆசையால் நடந்த கொடூரம்!