அரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா?

 

அரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா?

ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக முக்கிய முடிவைப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

ஓசூர்: ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக முக்கிய முடிவைப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ்  தெரிவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

rajini

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உனிசெட்டி கிராமத்தில் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் சார்பில் ரஜினியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ்  பங்கேற்றார். அப்போது 1000 பேருக்கு வேட்டி மற்றும் சேலை, ஊனமுற்றோர்களுக்குத் தையல் எந்திரங்கள், மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் என மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். வருகிற பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பார்’ என்றார்.