அரசியலில் கொஞ்சம் ரெஸ்ட்… மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய பிரபல நடிகை !

 

அரசியலில் கொஞ்சம் ரெஸ்ட்… மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய பிரபல நடிகை !

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக இருந்த திவ்யா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகை திவ்யா ஸ்பந்தனா மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தவுள்ளார்.

divya

தமிழில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இதையடுத்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இதையடுத்து அரசியலில் களமிறங்கிய இவர் கர்நாடகாவில் மண்டியா  மக்களவை தொகுதியின் காங்கிரஸ்  எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து  காங்கிரஸ் சமூக ஊடக குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார். மக்களைவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதன் எதிரொலியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் தலைவியாக இருந்த திவ்யா, தனது பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக  ரோஹன் குப்தா  என்பவரைக் காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது . 

divya

இந்நிலையில் சமீபகாலமாக அரசியலிலிருந்து அவர் விலகி இருக்கும் திவ்யா, மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தவுள்ளாராம். சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ள அவர் இயக்குநர்களிடம்  கதை கேட்டு வருகிறாராம். முன்னதாக கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ்- திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள  ‘தில் கா ராஜா’ என்ற கன்னட திரைப்படத்தின் டிரைலர்  வெளியாகியிருந்தது.இப்படத்தை இயக்குநர் சேமநாத் பட்டில் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.