அரசியலில் களம்கண்ட டிக்டாக் பிரபலம்!! அப்ப பிரசாரமும் டிக்டாக்கிலா?

 

அரசியலில் களம்கண்ட டிக்டாக் பிரபலம்!! அப்ப பிரசாரமும் டிக்டாக்கிலா?

டிக் டாக் பிரபலமான சோனாலி போகாட்டுக்கு அரசியலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

டிக் டாக் பிரபலமான சோனாலி போகாட்டுக்கு அரசியலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Sonali phogat

ஹரியானா மாநிலத்திற்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.அந்த பட்டியலில் டிக்டாக் பிரபலம் சோனாலி போகாட்டும் இடம்பெற்றுள்ளார். 

 

 

சோனாலி ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஹரியானா மகிளா மோர்ச்சா அமைப்பின் துணைத் தலைவராக உள்ள சோனாலியின் நடனமும், வசனங்களும் டிக்டாக்கில் மாஸ்… தேர்தலில் போட்டியிடுவதை வெளிப்படுத்தவும், வாய்ப்புக்கு நன்றிக்கூறவும் கூட ஒரு வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். காலப்போக்கில் தேர்தல் பிரச்சாரத்தையும் டிக்டாக்கிலே சோனாலி செய்வார் போல….