அரசியலில் களமிறங்கிய தாடி பாலாஜி மனைவி நித்யா: எந்த கட்சி தெரியுமா?

 

அரசியலில் களமிறங்கிய தாடி  பாலாஜி மனைவி நித்யா: எந்த கட்சி தெரியுமா?

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெற்றுப் பிரபலமான நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெற்றுப் பிரபலமான நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி  நித்யா. சமீபத்தில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக  கலந்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பாலாஜியை  பிரிந்து வாழ்ந்து வந்தார். எனினும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நித்யா தற்போது அரசியலில் குதித்துள்ளார். மருத்துவர் ஸ்வேதா ஷெட்டி என்பவர் தொடங்கியுள்ள ‘தேசிய பெண்கள் கட்சியில்’ அவர் சமீபத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழக தலைவராகவும் நித்யா நியமிக்கப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க பெண்களின் நலனுக்காகவே தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சி பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.