‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ – நடிகர் அஜித் திட்டவட்டம்

 

‘அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை’ – நடிகர் அஜித் திட்டவட்டம்

அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

சென்னை: அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என நடிகர் அஜித் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

‘தல’ என தன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடிப்பில், ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடும் எண்ணமில்லை. எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளேன். தனிப்பட்ட அரசியலில் எனக்கு இருக்கும் விருப்பு வெறுப்பை நான் யார் மீதும் திணிப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.

ajith kumar

மேலும், அந்தந்த துறையில் உள்ள தனது ரசிகர்கள் தங்களது துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார்.