அரசியலமைப்பில் மனிதர்களுக்குதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது பசுகளுக்கு அல்ல- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதிலடி

 

அரசியலமைப்பில் மனிதர்களுக்குதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது பசுகளுக்கு அல்ல- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதிலடி

அரசியலமைப்பில் வாழ்க்கை மற்றும் சமத்துவத்திற்கான உரிமை மனிதர்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி மனதில் வைத்திருப்பார் என நம்புகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி பேசியுள்ளார்.

மதுராவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: கிராமப்புற இந்தியா வாழக்கையில் கால்நடை வளர்ப்பு மிகவும் மதிப்புமிக்கது. கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தால் கால்நடை வளர்ப்பு இல்லாமல் வாழ முடியுமா? ஆனால் சிலர் ஓம் என்ற வார்த்தையை கேட்டதும் மின்சார ஷாக் அடித்தது போல் ஆகிவிடுகின்றனர். 

மோடி

அதேபோல் பசு என்ற வார்த்தையை கேட்டாலும் ஷாக் அடித்தது போல் ஆகிவிடுகின்றனர். 16வது அல்லது 17வது சென்சூரிக்கு நாட்டை கொண்டு செல்லும் என அவர்கள் நினைக்கிறார்கள். விலங்குகள் இல்லாமல் கிராமப்புற பொருளாதாரத்தை பற்றி நம்மால் பேசமுடியுமா?. இவ்வாறு அவர் பேசி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்களுக்கு ஹைதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

பசுக்கள்

இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், இந்து சகோதரர்களுக்கு பசு புனிதமான விலங்கு. ஆனால் அரசியலமைப்பில் வாழ்க்கை மற்றும் சமத்துவம் மனிதர்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர்  நரேந்திர மோடி மனதில் நினைவு வைத்திருப்பார் என நம்புகிறேன் பதில் கொடுத்துள்ளார்.