அரசின் மீட்பு பணிகளுடன் திமுகவினர் இணைந்து செயலாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

 

அரசின் மீட்பு பணிகளுடன் திமுகவினர் இணைந்து செயலாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜா புயல் பாதிப்பில் அரசு தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் திமுகவினர் இணைந்து செயலாற்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதிப்பில் அரசு தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் திமுகவினர் இணைந்து செயலாற்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சுமார் 100 கி.மீ மேலாக பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்து தனித்தீவாக மாறியுள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கஜா புயல் பாதிப்பில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.