அய்யா வந்துடாதீங்க… பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

 

அய்யா வந்துடாதீங்க… பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொடுக்கும் அசைன்மென்ட் தான் முக்கியம் என்பதால் அதிமுக தரப்பு கோரிக்கை எல்லாம் குப்பைக்கு போய்விட்டது.

எடப்பாடியும், ஓ.பி.எஸும் டென்ஷனில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தான் வெகுஜன விரோத மசோதாக்களை பாஜக எடுத்து வருகிறது. அதனால் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. முத்தலாக் மசோதாவால் ஏற்பட்ட தோல்வியால் வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தலைவர்களை அதிமுக தரப்பு கண்டு கொள்ளவேயில்லை.edappadi

வேட்பாளரும் தயவு செய்து பிரசாரம் செய்து வரும் ஓட்டையும் தடுத்துடாதீங்க என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொடுக்கும் அசைன்மென்ட் தான் முக்கியம் என்பதால் அதிமுக தரப்பு கோரிக்கை எல்லாம் குப்பைக்கு போய்விட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவால் கிராமங்களில் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறையும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது.

இதனால் அதிமுக தரப்பு ஆடிப்போய்க் கிடக்கிறது. அந்த சட்டத்திருத்தத்தை சரி செய்ய ஒரே வழி கரன்சி என்பதால் அதை ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார்கள். அதேபோல தயவு செய்து எங்கள் வேட்பாளருக்கு பிரசாரம் செய்யாதீங்க என்று அதிமுகவின் கூட்டணி கட்சிகள் செல்போனில் அழைத்து பாஜக தமிழக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.