அய்யய்யோ… அதுமட்டும் நடந்தே விடக்கூடாது… 60 ஆண்டுகளுக்குப் பிறகு பதறித் துடிக்கும் தமிழகம்..!

 

அய்யய்யோ… அதுமட்டும் நடந்தே விடக்கூடாது… 60 ஆண்டுகளுக்குப் பிறகு பதறித் துடிக்கும் தமிழகம்..!

இதுவரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 100 மில்லி மீட்டரை தாண்டியது இல்லை. இப்போது 204 மில்லி மீட்டர் வரை பதிவாகும் என அபாய சங்கை ஊதி இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்திய வானிலை அறிக்கைப்படி 60 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய புயல் உருவாக இருப்பதால் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.strom
 
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி  கனமழை முதல் மிக கனமழை பெய்யும்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இந்தப்புயல் வர்தா, கஜா, ஜல், தானே புயல்களை விட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதனால், அச்சத்தில் உறைந்துள்ளனர் மக்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உருவான புயல்கள் தமிழகத்தை எப்படி புரட்டிப்போட்டது..? எத்தனை பேரிடர்களை மக்கள் சந்தித்தனர்? பாதிப்புகள் என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்…strom

2011ம் ஆண்டு டிசம்பர் 25ல் இந்தோனேஷியாவில் கிளம்பி  27ல் இலங்கை வழியாக புகுந்து  29, 30 தேதிகளில் தமிழகத்தில் வட கடலோர பகுதியில் கோரதாண்டவம் ஆடி விட்டுப்போனது. மணிக்கு 165 கிலோமீட்டர் முதல் 165 கிலோமீட்டர் வேகம் கூட்டி கடலூரை கபலீகரம் செய்தது. தமிழகத்தில் மொத்தம் 48 உயிர்களையும் புதுச்சேரியில் 39 பேரையும் சடலமாக்கி விட்டு போனது. 4500 வாகனங்களும்,  10 ஆயிரம் படகுகளும் சேதமாகின. 150 கோடி ரூபாய் மதிப்பிலான சேதாரங்களை தானே  விலாசி விட்டுப்போனது.strom

தானேவுக்கு முன்னே வந்த ஆபத்தான பேரழகி லைலா. 2010 மே மாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் தலைவிரி கோலமாடினாள் லைலா. நிமிடத்திற்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த லைலா 65 உயிர்களை காவுவாங்கினாள். தமிழகத்தில் பறிபோனது 9 உயிர்கள். தமிழகம் மீது கருணை கொண்ட லைலா இலங்கையிலும், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இரு பகுதிகளும் 54 உயிர்களை குடித்து விட்டு காற்றோடு கலந்து விட்டாள். strom

அதை விட ஆக்ரோஷமாக பெனிசுலாவில் இருந்து கிளம்பி இந்தியப்பெருங்கடலில் இருந்து வரேன் பார்  2016 டிசம்பர் 11ம் தேதி வந்தது வர்தா… மணிக்கு 130 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த வர்தா 23 உயிர்களை சுருட்டிக் கொண்டது.  சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வேரோடு பிடிங்கிப்போட்டது. 10 ஆயிரம் ட்ரன்ஸ்ஃபார்மர்கள் பீஸ் பீஸாகி போயின. 224 சாலைகள் துண்டாகிப்போயின. 77 மாடுகள் பலியாயிம. 50க்கும் மேற்பட்ட குழுக்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வர்தா சேதப்படுத்தி செலவழித்து விட்டுப்போன தொகை 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய். strom

கஜா வர்றாண்டா என கர்ஜனையோடு 2018ல் மலாயில் உள்ள ’டிட்லி’யில் இருந்து கிளம்பி இந்தப்பெருங்கடல் வழியாக தகிடுதித்தோம் போட்டு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தரைமட்டமாக்கியது கஜா. 

110 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா கஜா காட்டிப்போனது. கஜா புயலின் போது நாகபட்டினத்தில் பதிவான மழையின் உச்சபட்ச அளவு 48.4 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது.  ஒரு லட்சம் மின் மரங்கள்  ஆயிரம் ட்ரான்ஸ்ஃபார்கள், 5000 படகுகள், 56 ஆராயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமாயின. 45 பேர் உயிர்கள் பறிபோயின. 18 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தன.

 strom

அதற்கே டெல்டா மாவட்டங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சின்னாபின்னமாகி இன்று வரை மீளமுடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் 30ம் தேதி வர உள்ள புயலில் 115 முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியையும், பதற்றையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த புயல்களுக்கெல்லாம் பாட்டன் இந்தப்புயல். 60 ஆண்டுகளில் இந்தப்புயலை போல இதுவரை தமிழகம் சந்தித்ததே இல்லை எனக் கூறப்படுகிறது. strom

இதுவரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 100 மில்லி மீட்டரை தாண்டியது இல்லை. இப்போது 204 மில்லி மீட்டர் வரை பதிவாகும் என அபாய சங்கை ஊதி இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். ஆக தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கப்போவது உறுதி என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.