அயோத்தி விவகாரம் : தீர்ப்பு எப்படியிருந்தாலும் அமைதியாக இருங்க! இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருக்கள் வலியுறுத்தல்!

அயோத்தி விவகாரம் : தீர்ப்பு எப்படியிருந்தாலும் அமைதியாக இருங்க! இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருக்கள் வலியுறுத்தல்!

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு யார் உரிமை கொண்டாடுவது என்கிற மிக சிக்கலான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிற நேரத்தில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருமார்கள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படியிருந்தாலும், அனைவரும் தீர்ப்பினை மதித்து அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

acase

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநிலங்களையும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 
இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் நேற்று, பொதுமக்களிடம் தீர்ப்பு எப்படியிருந்தாலும், அதை முழுமையாக மதித்து, அமைதி காக்கும்படி கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

acase1

‘சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வழக்கு, அயோத்தி வழக்கு. எனவே இந்த வழக்கின் தீர்ப்பை மதித்து, நல்லிணக்கத்தை பேண வேண்டியது அனைவரின் கடமையாகும். எந்த சமூகத்தவரின் மத உணர்வையும் புண்படுத்தாமல், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று லக்னோ மசூதியின் இமாம் மவுலானா காலித் ரஷீத் பிராங்கி மகலிதெரிவித்தார்.
‘எந்த மதத்தவராக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும்’ என அனைத்திந்திய ஷியா தனிச்சட்ட வாரியத்தை சேர்ந்த மவுலானா யாகூப் அப்பாசும் கூறினார்.

acase

‘இந்திய அரசியல்சாசனம் மற்றும் நீதித்துறை மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். மக்கள் தங்கள் வீடு, நகரம், மாநிலம், தேசத்தின் மேம்பாடு குறித்து தான் பேச வேண்டும். இந்திய மக்கள் மிகுந்த முதிர்ச்சித்தன்மையுடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹர்சரத்கஞ்ச் அனுமன் கோவில் பூசாரி சர்வேஷ் சுக்லா தெரிவித்தார்.
‘நம்முடையது, செயல்பாட்டு ஜனநாயகம் ஆகும். கோர்ட்டு தீர்ப்புகளை எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் முற்றிலும் மதிக்க வேண்டும்’ என்று லக்னோ கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட அதிபர் பாதிரியார் டொனால்டு டிசோசா தெரிவித்தார்.