அயோத்தி வழக்கை 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டம் – உச்சநீதிமன்றம் முடிவு

 

அயோத்தி வழக்கை 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டம் – உச்சநீதிமன்றம் முடிவு

அயோத்தி வழக்கின் விசாரனையை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார்.

அயோத்தி வழக்கின் விசாரனையை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி- பாபர் மசூதி சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு நிர்மோஹி அஹாரா, மூலவர் ராம் லல்லா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் உரிமை கோரி வருகின்றன. இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாேய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து தினசரி வழக்காக விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.ரஞ்சன் கோகோய்

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார். அவர் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 17ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.