அயோத்தி வழக்கு! குழுவில் இருந்தவர்கள், வழக்கறிஞர்கள் 5 பேருமே தமிழர்கள் தான்!

அயோத்தி வழக்கு! குழுவில் இருந்தவர்கள், வழக்கறிஞர்கள் 5 பேருமே தமிழர்கள் தான்!

இன்று நாடு முழுவதும் பரபரப்புடன் அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கு. ஆனால், இந்த அயோத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவருமே தமிழர்கள் தான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆரம்பத்தில் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா. 

இப்ராஹிம் கலிபுல்லா, தமிழகத்தின் காரைக்குடியில் பிறந்தவர். கடந்த 2000 வது ஆண்டில் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர், அப்போது நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு நடந்த தேர்தல் செல்லாது என டிவிஷன் பெஞ்சில் மாறுபட்ட தீர்ப்பை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.  அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

judges

இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்ற இன்னொருவர் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். இவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் முன் வைத்த 3 அம்ச கோரிக்கை ஏற்கப்படவில்லை. 
மத்தியஸ்தர் குழுவின் உள்ள மூன்றாவது நபர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு. இவர் சென்னையை சேர்ந்தவர். பல்வேறு மத்தியஸ்தர்கள் அடங்கிய சமரசத்திற்கான மத்தியஸ்தர்கள் சபையை நிறுவியவர் இவர். இந்திய மத்தியஸ்தர்கள் அமைப்பின் தலைவராகவும், சர்வதேச மத்தியஸ்தர்கள் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இயக்குனராகவும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் மூவரைத் தவிர, அயோத்தி வழக்கில் ராம் லல்லா அமைப்பிற்காக வாதாடிய வழக்கறிஞர் பராசரனும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். இவரது சொந்த ஊர், தமிழகத்தின் ஸ்ரீ ரங்கம். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பதவிகளை வகித்தவர் பராசரன். 
போபால் விஷவாயுப் பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு எதிராகவும் வாதாடியவர் இவர் தான். 

court

ராம் லல்லா அமைப்பிற்க்காக அயோத்திய வழக்கில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன். கோவையை பூர்விகமாகக் கொண்ட இவர், காவிரி வழக்கில் தமிழக அரசின் சார்பாக வாதாடியவர். நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முக்கிய வழக்கில் இடம் பெற்றிருக்கும் இந்த ஐந்து பேருமே தமிழர்கள் தான்!