அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

 

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி தலைமை நிதிபதி ரஞ்சன் கோகய் பணிஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றம்

தீர்ப்பு வெளியாகும் போது எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க உத்திரப்பிரதேசத்துக்கு கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் நாளை முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.