அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் யாரும் வாயை திறக்க கூடாது! உ.பி. காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

 

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் யாரும் வாயை திறக்க கூடாது! உ.பி. காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு வெளியானவுடன், யாரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரியங்கா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக இருந்து வரும் அயோத்தி நில உரிமை பிரச்னை வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை அனைவரும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் கடந்த சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தது. மேலும், அயோத்தி விவகாரம் குறித்து எந்தவொரு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேச கூடாது என தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்.

அயோத்தி, உச்ச நீதிமன்றம்

இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேச காங்கிரஸ் ஆலோசனை கமிட்டியின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் உத்தர பிரதேச தலைவர்கள் யாரும் முரண்பாடான கருத்துக்களை கூறக் கூடாது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.

காங்கிரஸ்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக கட்சி தலைமையின் நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக வந்தபிறகே அதன்படி பேச வேண்டும் என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டபோது, காங்கிரஸ் அதனை எதிர்த்தது ஆனால் அந்த கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினர். அதனால் அதுபோன்று மற்றொரு சம்பவம் இந்த விஷயத்திலும் நடந்து விட கூடாது என்பதற்காகத்தான் பிரியங்கா காந்தி அப்படி கூறியதாக தகவல்.