அயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..

 

அயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..

அயோத்தியில் உள்ள பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமானவர்கள் யார் என கண்டுபிடிக்கப் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் முயற்சி செய்து வருகிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமானவர்கள் யார் என கண்டுபிடிக்கப் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் முயற்சி செய்து வருகிறது. இதனால், முன்னாள் நீதிபதி தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த சமரசக் குழுவின் முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில், உச்ச நீதி மன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

ayodhya case

தொடர்ந்து 40 நாட்களாக, விடுமுறை நாட்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் கடைசி நாளான இன்று, தீர்ப்பு வெளியாகும் என அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருந்தனர்.

Supreme court

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், எழுதுப்பூர்வ ஆவணங்கள் இருந்தால் அடுத்த 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம் என்று கூறி வழக்கின் தீர்ப்பை அறிவிக்காமலும் மறு அமர்வின் தேதியைக் குறிப்பிடாமலும் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.