அயோத்தி ராமர் கோயில் கட்ட நிலம் மட்டுமல்ல, தங்கத்தில் செங்கல்லும் தருகிறேன்! அதுக்கு பதிலா நீங்க இதமட்டும் கொடுங்க… முகலாய இளவரசர்

 

அயோத்தி ராமர் கோயில் கட்ட நிலம் மட்டுமல்ல, தங்கத்தில் செங்கல்லும் தருகிறேன்! அதுக்கு பதிலா நீங்க இதமட்டும் கொடுங்க… முகலாய இளவரசர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தங்க செங்கல் தருவதாக முகலாய வம்சாவளி இளவரசர் ஹபீபுதீன் டூஸி தெரிவித்துள்ளார். 

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகக் கூறி, கடந்த 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

Ram temple

செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர் ஹபீபுதீன் டூஸி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஒரே ஒரு தங்க செங்கல்லும், நிலமும் தருகிறேன் ஆனால் அதற்கு பதில்  உச்சநீதிமன்றம் பாபர் மசூதி – ராம் ஜென்ம பூமி நிலத்தை என்னிடம் கொடுத்துவிட வேண்டும். பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் கோயில் இருந்தது என்பது இந்துக்களின் நம்பிக்கை. என்னிடம் அந்த நிலத்தை ஒப்படைத்தால் நானே உங்களுக்கு தானமாக வழங்குகிறேன். ஏனெனில் நான் தான் முகலாய வாரிசு. அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது” என்று கூறினார்.