அயோத்தி நில உரிமையை விட்டு கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த சன்னி வக்பு வாரியம்

 

அயோத்தி நில உரிமையை விட்டு கொடுக்க ஏற்கனவே தயாராக இருந்த சன்னி வக்பு வாரியம்

அயோத்தி நில பிரச்னைக்கு முடிவு காண, கடந்த மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு சன்னி மத்திய வக்பு வாரியம் எழுதிய தீர்வு கடிதத்தில், தேச நல்லிணக்கத்தின் நலனை கருத்தில் கொண்டு சர்ச்சைக்குரிய அயோத்தி நில உரிமையை விட்டு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.75 ஏக்கர் நிலம் மீதான உரிமை வழக்கு பல ஆண்டுகளாக இழுத்து வந்தது. உச்ச நீதிமன்றம் அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு முன், அந்த வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்து கொள்ளலாம் என தெரிவித்தது. மேலும் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவையும் அமைத்தது. இந்நிலையில், அயோத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வர கடந்த மார்ச் மாதத்தில் அயோத்தி வழக்கின் முக்கிய வழக்காளிகளில் ஒன்றான சன்னி மத்திய வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்துக்கு தீர்வு பார்முலா குறித்து கடிதம் எழுதியது.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம்

சன்னி மத்திய வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தில், நிலம் தொடர்பான உரிமைகள், நலன்கள் மற்றும் உரிமை கோரல்களை விட்டு கொடுப்பதில் எந்தவித ஆட்சபணேயும் இல்லை மற்றும் நல்லிணக்கத்தின் பெரும் நலனை கருத்தில் கொண்டு இந்த தீர்வுக்குள் நுழைகிறது. 51 பிரிவின்கீழ் (1-ஏ ஆப் வக்பு சட்டம், 1995 அல்லது எந்தவொரு சட்டம்) மத்திய அரசு அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை என வாரியம் உறுதி செய்கிறது. மேலும், உள்ளூர் முஸ்லிம் மக்களின் விருப்படி, வாரியம் வேறு இடத்தில் மசூதி கட்டும்.

உச்ச நீதிமன்றம்

அரசியலமைப்பின் 142வது பிரிவின்கீழ் உத்தரவு மற்றும் தனது உத்தரவுக்கான அடித்தளமாக இந்த தீர்வை பயன்படுத்துவதையும் நீதிமன்றம் பரிசீலிக்கலாம் மற்றும் சர்ச்சைக்கு விரிவான, பயனுள்ள இணக்கான முடிவை கொண்டு வருவதன் மூலம் நீதியை வழங்குங்கள் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.