அயோத்தி தீர்ப்பை மதிக்கிறேன்: ரஜினிகாந்த் கருத்து!

 

அயோத்தி தீர்ப்பை மதிக்கிறேன்: ரஜினிகாந்த் கருத்து!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

அயோத்தி  தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்டமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ayodha

அதில், 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிமன்றம் மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் கோவில் கட்டுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று  கூறியுள்ளது.இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த்,’ உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் தீர்ப்பை  மதிக்க வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் நன்மைக்காக அனைவரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்’ என்றார்.