அயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு சில டிப்ஸ்!

 

அயோத்தி தீர்ப்பு: சோஷியல்  மீடியா பயனாளர்களுக்கு சில டிப்ஸ்!

ஆதரவாகவோ, அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து பதிவிட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின்  கடைசிக்கட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீர்ப்பு தொடர்பாக ஆதரவாகவோ, அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து பதிவிட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ayodhya

இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ் வலைதளவாசிகளுக்கு  சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். 

ayidhya

‘கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிட கூடாது. அதையும்  மீறி பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும்  வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர கூடாது. உறுதி செய்யப்பட்ட செய்திகளை மட்டும் பகிர வேண்டும். வாட் அப் அட்மின்கள், குழுவில் அட்மின்கள் மட்டும் பதிவிடும் வகையில் வைத்து கொள்ளுங்கள். அனைவரும் இணைந்து பொது அமைதியை நிலைநாட்டுவோம்.’ என்று அறிவுறுத்தியுள்ளார்.