அயோத்தி தீர்ப்பு.. சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட  மூவருக்கு சிறை தண்டனை!

அயோத்தி தீர்ப்பு.. சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட  மூவருக்கு சிறை தண்டனை!

பல வருடங்களாக தொடர்ந்துக் கொண்டிருந்த அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் கடந்த 9ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்வதற்கு அனுமதியும், முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை மூன்று மாத காலத்திற்குள் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

ayodhya

சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரைச் சேர்ந்த சாதிக் மாலிக் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்தை ஆதரித்து அவரது நண்பர்கள் இருவர் லைக் செய்திருந்தனர்.
சாதிக் மாலிக் வெளியிட்ட கருத்தைப் பற்றி பலரும் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து முசாபர்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.