‘அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்’ : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை!

 

‘அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும்’ : 27 வருடங்களாக விரதம் இருக்கும் ஆசிரியை!

அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்று பல ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்று பல ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு தீர்வு காண, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த சனிக் கிழமை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்தும் உத்தரவிட்டது. 

Ayodhya

மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்மிளா சதுர்வேதி (81) சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர் அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் என்று 27 வருடங்களாகப் பால், பழம் மட்டுமே உண்டு விரதம் இருந்து வருகிறார்.

Oormila

 

இது குறித்துப் பேசிய ஆசிரியையின் மகன், ‘என் அம்மா தீவிர ராம பக்தர். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வன்முறைகளால் அவர் பெரிதும் மன உளைச்சலில் இருந்தார். அதிலிருந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை பால், பழம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று 27 வருடமாக விரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை வெளியான தீர்ப்பில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியதால் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 27 ஆண்டுக் கால வேண்டுதல் நிறைவேறியதால் விரைவில் ஒரு விழா நடத்தி அம்மாவின் விரதத்தை நிறைவு பெறச் செய்வோம்’ என்று கூறியுள்ளார்.