அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வீட்டிற்கு ரூ.11 தர வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வீட்டிற்கு ரூ.11 தர வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்த ராம ராஜ்யம் எந்த பாகுபாடுகளும் இல்லாமல்,அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்டோரின் வளர்ச்சியும் இதில் அடங்கும்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த சர்ச்சைக்குரிய நில பிரச்சனையான ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்றும் அதில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ttn

இது குறித்து ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர் கோவில் கட்ட பணிகள் துவங்கப்படும். சமூக பங்களிப்பிலேயே ராம ராஜ்யம் இயங்கி வருகிறது. இந்த ராம ராஜ்யம் எந்த பாகுபாடுகளும் இல்லாமல்,அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்டோரின் வளர்ச்சியும் இதில் அடங்கும். அதனால், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒவ்வொரு வீடும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். 

ttn

அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி பல அமைப்புகள் மனுத்தாக்கல் செய்தன. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த அனைத்து மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக பா.ஜ.கவும், உத்திர பிரதேச அரசும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.