அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: சர்ச்சையை கிளப்பும் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி

 

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: சர்ச்சையை கிளப்பும் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் அயோத்தி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இந்து மதகுரு ஸ்வரூபானந்த், வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜ்: இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் அயோத்தி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இந்து மதகுரு ஸ்வரூபானந்த், வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

1992-ஆம் இந்து மத செயல்பாட்டாளர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்காணோர் உயிர் இழந்தனர். அன்று முதல் இன்றுவரை அங்குள்ள இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

babur

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததென இந்து மத செயல்பாட்டாளர்கள் கூறி வந்தனர். ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை அங்கு கோயில் இருந்ததற்கான எந்த சான்றும் கிடையாது என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இந்து மதகுரு ஸ்வரூபானந்த், வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

ஸ்வரூபனந்த் கூறியிருப்பது மதப்பிரச்சனையை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது. பாபர் மசூதி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இவ்வாறு கருத்து தெரிவிப்பது மதக்கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. இதுகுறித்து பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பில் வாதாடும் சஃபர்யப் ஜிலானி எனும்  வழக்கறிஞர், எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என கூறியிருக்கிறார்.

ஆனால் ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் தொண்டர்கள், நிச்சயமாக அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவோம். அதற்காக கைது செய்யப்பட்டாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.