அயோத்தியில் அமைகிறது இந்தியாவின் உயரமான சிலை| மோடிக்கு போட்டியாக யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் அமைகிறது இந்தியாவின் உயரமான சிலை| மோடிக்கு போட்டியாக யோகி ஆதித்யநாத்

அயோத்தி நகரின் சரயு நதிக்கரையின் அருகில் நூறு ஹெக்டேர் நிலப்பரப்பில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி நகரின் சரயு நதிக்கரையின் அருகில் நூறு ஹெக்டேர் நிலப்பரப்பில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

yogi

 இது தொடர்பாக நேற்று மாலை நடைபெற்ற அம்மாநில அரசின் உயர்மட்டக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய யோகி ஆதித்யநாத்,குஜராத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை விட அயோத்தியில் அமைய இருக்கும் ராமர் சிலை உயரமாக, சுமார் 251 மீட்டர்கள் உயரத்தில் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. சிலை அமைப்பதுடன், அயோத்தியின் கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.

ramar statue

மேலும் இங்கு நூலகம், வாகன நிறுத்துமிடம், வணிகக் கூடங்கள் உடன் கூடிய ராமர் தொடர்பான டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கவும் முடிவெடுத்துள்ளோம். இதற்கான தொழில்நுட்ப உதவிகளுக்கு குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.சிலை அமைக்கும் இடம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐஐடி கான்பூர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த தேசிய பசுமை பொறியியல் ஆய்வக அமைப்பின் உதவிகளை நாடியுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.