அயல் நாட்டு தம்பதி அனாதை குழந்தைகளை தத்தெடுப்பது ஏன்? பகீர் ரிப்போர்ட் !

அயல் நாட்டு தம்பதி அனாதை குழந்தைகளை தத்தெடுப்பது ஏன்? பகீர் ரிப்போர்ட் !

காப்பீட்டுப் பணத்துக்காக தத்தெடுத்த மகனை கூலிப்படை வைத்துக் கொன்றதாக லண்டன் தம்பதி மீது புகார் எழுந்துள்ளது.
லண்டனில் வசிக்கும் ஆர்தி திர், கவல் ரய்ஜடா தம்பதி குஜராத்தில் கோபால்  என்ற அனாதைச் சிறுவனை கடந்த 2015ம் ஆண்டு தத்தெடுத்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுவனை லண்டன் அழைத்து செல்வதாக கூறிய தம்பதி அழைத்து செல்லவில்லை. லண்டனில் இருந்தபடியே தத்தெடுத்த சிறுவன் மீது 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு போட்டுள்ளனர்.

காப்பீட்டுப் பணத்துக்காக தத்தெடுத்த மகனை கூலிப்படை வைத்துக் கொன்றதாக லண்டன் தம்பதி மீது புகார் எழுந்துள்ளது.
லண்டனில் வசிக்கும் ஆர்தி திர், கவல் ரய்ஜடா தம்பதி குஜராத்தில் கோபால்  என்ற அனாதைச் சிறுவனை கடந்த 2015ம் ஆண்டு தத்தெடுத்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுவனை லண்டன் அழைத்து செல்வதாக கூறிய தம்பதி அழைத்து செல்லவில்லை. லண்டனில் இருந்தபடியே தத்தெடுத்த சிறுவன் மீது 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு போட்டுள்ளனர். அந்தபணம் 10 ஆண்டுகளுக்கு பிறகு அல்லது சிறுவன் இறந்த பிறகு கிடைப்பதுபோல் காப்பீடு பணத்தை கட்டி வந்துள்ளனர். இந் நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கோபால், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களால் கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த உறவினரும் கொலை செய்யப்பட்டார்.

couple

கோபாலை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் பிடித்து விசாரித்தபோது, சிறுவனை தத்தெடுத்த தம்பதியின் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் லண்டன் தம்பதிதான் சிறுவனை கொல்ல கூலிப் படை ஏவியதை கண்டுபிடித்தனர்.
அதாவது, காப்பீட்டுப் பணத்தை பெற, இந்தியாவில் இருக்கும் அனாதைச் சிறுவனை தத்தெடுத்து, அவன் மீது காப்பீடு செய்து, அவனைக் கொன்று, காப்பீட்டுப் பணத்தை பெறுவதுதான் இவர்களது திட்டம். 
இந்நிலையில் இந்த தம்பதியை, இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இந்திய தரப்பில் வைக்கப்படும் தொடர் கோரிக்கைகைளை இங்கிலாந்து நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்துவருகிறது.