அயன் மேனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த நெட்டிசன்கள்

 

அயன் மேனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த நெட்டிசன்கள்

உலக மக்களுக்கு நிகழும் வன்முறைக்கு எதிராக போராடவும் ஒரு இயந்திரத்தை தயாரித்து அயன் மேனாக உருவெடுக்கிறார்.

மார்வெல் காமிக்ஸின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று அயன் மேன். டோனி ஸ்டார்க் என்ற நுண்ணறிவு மிக்க பொறியாளர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பேரழிவு ஆயுதங்களை தயாரிக்குமாறு வற்புறுத்தப்படும் போது இதய பாதிப்பால் அவதிப்படுகிறார். தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், உலக மக்களுக்கு நிகழும் வன்முறைக்கு எதிராக போராடவும் ஒரு இயந்திரத்தை தயாரித்து அயன் மேனாக உருவெடுக்கிறார்.

dvvv

ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த அயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அயன் மேன் திரைப்படம் மட்டும் 3 பாகங்களாக வெளியாகி மார்வெல் ரசிகர்களிடமும், ஹாலிவுட் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மார்வெல் கதாபாத்திரங்கள் ஒன்றிணைந்த ‘அவெஞ்சர்ஸ்’ படத்திலும் அயன் மேன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்.

sdv

அயன் மேன் ஒரு சிறந்த அறிவாளி என்பதால், வில்லன்களை சமாளிக்கும் திட்டத்தில் அவரது பங்களிப்பு அதிகமாக இருக்கும். தற்போது அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

dfbdf

இந்த படத்தில் அயன் மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் சோகமான நெட்டிசன்கள், அயன் மேனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து உலவ விட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.