அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர்: கொலை வழக்கு பதியப்படுமா?!

 

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர்: கொலை வழக்கு பதியப்படுமா?!

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயனாவரத்தில் வசித்து வந்த பிரபல ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் கொலை செய்ய முயன்றதாக சுமார் 51 வழக்குகள் பதிவாகி இருப்பதோடு, 9 முறை குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இப்படி பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கரை, கடந்த மாதம் 21 ஆம் தேதி அயனாவரம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர்: கொலை வழக்கு பதியப்படுமா?!

காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் இந்த என்கவுண்டர் நடந்த நிலையில், இது திட்டமிட்ட கொலை தான் என சங்கரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்குததொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். இந்த நிலையில் ரவுடி சங்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்கு பதிய வேண்டுமா என்பதை விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி முடிவெடுக்கும் என கூறிய நீதிபதிகள், செப்.14 அம தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.