அம்மா மற்றும் மனைவிக்காக சச்சின் செய்த ருசிகர சமையல்: வைரல் வீடியோ!

 

அம்மா மற்றும் மனைவிக்காக சச்சின் செய்த ருசிகர சமையல்: வைரல் வீடியோ!

மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் அம்மாவுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளார்.

மும்பை: மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் அம்மாவுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளார்.

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதனால் பல்வேறு தரப்பினரும் பெண்களுக்கு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது அம்மா மற்றும் மனைவி அஞ்சலிக்கு பிடித்தமான உணவை செய்து கொடுத்து அசத்தியுள்ளார். யார் உதவியும் இன்றி கத்திரிக்காய் கொண்டு உணவு சமைத்துள்ள அவர் அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

மேலும் அந்தவீடியோவில் சமைத்த உணவைத் தனது அம்மாவுக்குக் கொடுக்க அவர் சுவையாக இருப்பதாகக் கூறுகிறார். இதை கேட்ட சச்சின், ‘தனது மகன் எந்தவொரு முயற்சியில் தோல்வியுற்றாலும் அவனது அம்மா அவனிடம் அதை தெரிவிக்க மாட்டாள். இது தான் தாய் பாசம்’ என்று கூறி நெகிழ்ச்சியடைகிறார். இந்த  வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.