அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைகிறது அதிமுக? உண்மை நிலவரம் என்ன?

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைகிறது அதிமுக? உண்மை நிலவரம் என்ன?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் விரைவில் அதிமுக இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் விரைவில் அதிமுக இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சுயேட்சை வேட்பாளராக ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்ற தினகரன் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அதேசமயம் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், மத்திய பாஜகவிற்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார் தினகரன். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகச் செயல்பட தன்னுடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாகக் கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி  ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அணிகளாக இருக்கும் அதிமுக அணி இணையுமா? அப்படி இணையும் பட்சத்தில் என்ன மாதிரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.