அம்மா என அழைத்தால் போதும் ! கண்கலங்கும், கலங்க வைக்கும் தம்பதி !

 

அம்மா என அழைத்தால் போதும் ! கண்கலங்கும், கலங்க வைக்கும் தம்பதி !

இறுதி மூச்சு விடுவதற்குள் ஒரு முறையாவது பிள்ளைகளை பார்த்து விடவேண்டும் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக வயோதிக தம்பதி அலைகின்றனர்.

இறுதி மூச்சு விடுவதற்குள் ஒரு முறையாவது பிள்ளைகளை பார்த்து விடவேண்டும் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக வயோதிக தம்பதி அலைகின்றனர்.

பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள். இதற்கான அர்த்தங்கள் பல பெற்றோருக்கு தெரியாமலே போவதால் தனக்கென எதையும் சேமித்து வைக்காமல் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு இறுதியில் கால் வயிற்று கஞ்சிக்கு கூட காசில்லாமல் வெயிலும் மழையிலும் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சம்பவம்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணேசன், சரசு வயோதிக தம்பதிக்கு நடந்துள்ளது.

kumariparentsearchson

நாகர்கோவில் அடுத்த கோட்டாறு பகுதியை சேர்ந்த கணேசன் செருப்புத் தைத்தும், குடை ரிப்பேர் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு லட்சுமி, சத்யராஜ் என 2 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டனர். பின்னர் பெற்றோரை சந்திப்பதையே நிரந்தரமாக நிறுத்தி விட்டனர்.

என்னதான் திருமணம் செய்து கொடுத்துவிட்டாலும் அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதையாவது தெரிந்து கொள்ளவேண்டும் என பெற்றோருக்கு ஆவல். பிள்ளைகள் இருவருமே தங்களின் முகவரியை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. இதனால் அவர்களை தேடி கன்னியாகுமரி, கேரள மாநிலம் முழுவதும் நடைபயணமாகவே அலைந்து விட்டனர். அங்கங்கு கடை அமைத்து செருப்பை தைப்பதும், குடை ரிப்பேர் செய்வதும் என தங்களது வயிற்றுப் பசியை போக்கி வந்தனர். எனினும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ஊர் ஊராக அலைகின்றனர். கொட்டும் மழையிலும், கடுங்குளிரிலும், வெயிலிலும் அழுக்குத் துணியோடு அவதிப்பட்டு வருகின்றனர். 7 வருடமாக அலையும் இந்த தம்பதிக்கு யாராவது உணவு கொடுத்தால் வாங்கி சாப்பிடுகின்றனர். கணேசனுக்கு 75 வயது ஆகிவிட்டதால் பிள்ளைகளை தேடும் தெம்பை இழந்துவிட்டார். தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் மனைவியுடன் தஞ்சம் புகுந்துள்ளார்.

எங்கேயோ வடநாட்டில் ஒரு அழகான பெண் பிச்சைக்காரனுக்கு உணவு ஊட்டினால் ஒட்டுமொத்த வாட்ஸ்அப், பேஸ்புக் போராளிகள் வாழ்த்துக்கள் போட்டு தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதுபோல் உறவுகளை தேடி அலையும் தம்பதியை பார்க்கும்போது ஏதோ பிச்சை எடுப்பது போலவும், உழைத்து சம்பாதிக்க தெரியாதா என ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டு சொந்த வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.

ஒருவேளை கணேசனின் பிள்ளைகள் இந்தியாவில் இருந்து இந்த செய்தியை பார்த்தாவது திரும்பி வந்து அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஒரு வாய் சோறு ஊட்டினால் உலகத்தில் அதை விட மகிழ்ச்சி எந்த பெற்றோருக்கும் இல்லை.

ஒருவேளை கூட பட்டினிக் கிடக்க விடாமல், வெயிலில் நிற்க விடாமல் மழையில் நனைய விடமாமல் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்த இந்த தம்பதிக்கு இயற்கை மட்டுமே தற்போது அன்னையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.