அம்மா உணவகத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி!

 

அம்மா உணவகத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு, அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அம்மா உணவகங்கள் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு பசியாற்றி வருகிறது. அம்மா உணவகங்களுக்கு அரசியல் கட்சியினர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நிதியுதவி அளித்திருக்கிறார். 

ttn

கரூரில் உழவர் சந்தை மற்றும் அரசு மருத்துவகல்லூரி பழைய மருத்துவமனை, குளித்தலையில் அமைந்துள்ள மூன்று அம்மா உணவகங்களிலும் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர். அதனால் கரூர் உழவர் சந்தைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் பணத்தை  நகராட்சி ஆணையர் சுதாவிடம் வழங்கியிருக்கிறார்.